Alaipayuthe

music
carnatic
krithi
kaanada
oothukadu venkata kavi
publish

Pallavi

அலைபாயுதே… கண்ணா, என் மனம் அலைபாயுதே

ஆனந்த மோகன வேணுகானம் அதில்

Anupallavi

நிலைபெயராது சிலைபோலவே நின்று…

நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம்

Charanam

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே…

திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே

கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே

கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உருதி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா

ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து மகிழ்த்தவா

கலைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா

கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?

குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு