Shrinivasa Thiru

music
carnatic
hamsanandhi
papanasam sivam
publish

Pallavi

ஸ்ரீநிவாஸ திருவேங்கட முடையாய்

ஜெய கோவிந்த முகுந்தா அனந்தா

Anupallavi

தீன சரண்யன் எனும் புகழ்கொண்டாய்

தீனன் போல் என்னை வேறெவர் கண்டாய்

Charanam

ஜகம்புகழும் ஏழுமலை மாயவனே

திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே

ஜகன்னாதா சங்கு சக்ர தரணே

திருவடிக்கபயம் அபயமைய்யா